Pages

Powered By Blogger

Tuesday, March 1, 2011

கருண கீதா சாரம்!


பகுத்தறிவுத் தலைவரின்
முந்தைய பரிணாமம்- புரோகித சாம்ராட்!
பரிணாமம் - தானே கடவுள்!
கடவுளானால் அடுத்து உபதேசம்தானே!
இது கருண கீதோபதேசம்!
அலைக்கற்றை ஊழலில் - எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
சிபிஐ பிளாக்மெயிலில் - எது நடக்கிறதோ அது நன்றாகவே
நடக்கிறது
தேர்தலுக்குப் பின் - எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உண்டியல் காசு தவிர - உன்னுடையது எதை இழந்தாய்,
கட்சி நிதி கரைந்தால் - எதற்காக நீ அழுகிறாய்?
அறிவு ஆலயம் வரும்போது - எதை கொண்டு வந்தாய்?
பகுத்தறிவோடு இருப்பதால் - அதை நீ இழப்பதற்கு?
கட்சிக் கருவூலம்போல் - எதை நீ படைத்திருந்தாய்?
ஆட்சிவிட்டுப் போகும்போது - அது வீணாவதற்குவாரியப் பதவி அனுபவிக்க - எதை நீ எடுத்துக்கொண்டாயோகாண்டிராக்ட் கமிஷன்களான - அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.கிடைத்த கமிஷன் தொகையான - எது
இன்று உன்னுடையதோதேர்தல் நெருங்குவதால் - அது நாளை மற்றொருவருடையதாகிறது -
தேர்தல் முடிந்த
மறுநாள் அது வேறோருவருடையதாகும்
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை -
இந்த மாற்றம் உலக (தமிழக) நியதியாகும்!
(பின்குறிப்பு: படம் - பழசு ; பார்வை - புதுசு)

தின மணியில் படித்தது

No comments:

Post a Comment