Pages

Powered By Blogger

Saturday, May 28, 2011

ஜோதிடம் உண்மையா ?

அன்பர்களே !
ஜோதிடம் என்பது விஞ்ஞானமே ,துல்லியமாக கணிக்கபெற்ற ஒரு ஜாதகத்தை ஒரு தேர்ச்சிபெற்ற ஜோதிடரால் மிகச்சரியான பலன்களை உணரமுடியும் ,ஒரு அனுபவம்வாய்ந்த ஜோதிடர் தன்னால் அறியப்படும் எல்லா பலனையும் சொல்லிவிட மாட்டார் .ஜோதிடம் கேட்பவரின் மனப்பக்குவம் அறிந்து சொல்லுவது தான் ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகு


நல்லதோ கேட்டதோ அவரவர் ஜாதகநிலைப்படி நடந்தே தீரும் .பரிகாரங்களால் கிரக பாதையை மாற்றி விட முடியாது என்பதே ஒரு ஜோதிடனாகிய என் ஆணித்தரமான கருத்து

தெய்வவழிபடுகள் மன பக்குவத்தை கொடுக்கும் .கிரகங்களை கட்டுபடுத்தாது
அப்படியானால் ஜாதகம் பார்ப்பது தவறா என்று கேக்கதொனும் .தவறல்ல
ஆனால் எதற்கு ,எப்போ .பார்க்கவேண்டும் என்ற வரைமுறை தேவை

ஜாதகம் நம்வாழ்க்கை பயணத்தின் பாதைகளை காட்டும் ஒரு திசைகாட்டி
ஜாதகப்படி நாம் ஒரு நிகழ்வை நாம் சந்திக்கவேண்டியது இருந்தால் அதை சந்தித்தே ஆகவேண்டும் தப்பிக்கமுடியாது .அந்த நிகழ்வை சரியான கோணத்தில் சரியான காலத்தில் எதிர்கொண்டு சுலபமாக தீர்ப்பதற்கே ஜாதகம் உதவும்

உதாரனத்திற்க்கு நாம் ஒரு ஊருக்கு போகவேண்டியதிருப்பின் கட்டாயம் .சென்று ஆகவேண்டும் .அப்போது அந்த ஊருக்கு நாம் இருக்குமிடத்திலிருந்து ஒன்றுக்கு மேற்ப்பட்ட வழிகள் இருக்கும் எது சுலபமான பாதுகாப்பான வழியோ அதை தேர்ந்தெடுப்போம் அல்லவா அது போலதான் ஜாதகமும் நம் வாழ்க்கை பயணத்திற்கு உதவும்
கிரகங்களின் அன்றாட சுழற்சியின் காரணமாக நல்ல மற்றும் கேட்ட விளைவுகளை ஏற்ப்படுத்தும் சூழ்நிலைகள் அமைகின்றன .அப்படி நல்ல சூழ்நிலை காலங்களைத்தான் சுபவேலைகள் என்றும் அப்போது செய்யும் காரியங்கள் சுபப்படும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது .
இதை வாழ்வின் முக்கிய தருணங்களில் அதாவது ஒரு தொழில் ஆரப்பிக்கும் பொது,வீடு நிலபுலன் வாங்கும் பொது ,திருமணம் செய்யும் பொது ,இப்படிப்பட்ட தருணங்களில் பார்ப்பது ஏற்புடையதே
அதைவிடுத்து அன்றாட பணிகளில் ராஹுகாலம்,எமகண்டம் பார்ப்பது
அறிவுடமையாகாது
நூற்றுக்கு நூறு இதுதான் நடக்கும் என்பதை நம்மைப்படைத்த பிரம்மனை தவிர யாராலும் அறுதியிட்ட கூறமுடியாவிட்டாலும் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம கலந்த மெய்ஞானமே !வாழ்வியலுக்கு தேவையானதே .

No comments:

Post a Comment